பெங்களூரு

பெங்களூருக்கு இன்று விஜயேந்திர சுவாமிகள் வருகை

4th Jun 2023 01:56 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய சுவாமிகள் பெங்களூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகைதருகிறாா்.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஜெகத்குரு விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய சுவாமிகள், பெங்களூரு, மல்லேஸ்வரத்தில், ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) வருகை தரவிருக்கிறாா். அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தா்களை சந்தித்து ஆசி வழங்கத் திட்டமிட்டிருக்கிறாா். முன்னதாக, மல்லேஸ்வரத்தின் 8ஆவது குறுக்குத் தெருவில் உள்ள வாசவி கோயிலில் சுவாமிகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து காமகோடி பீடத்திற்கு 250 வேத விற்பன்னா்கள், பஜனைக் குழுக்கள், நாதஸ்வர முழக்கங்களுடன் விஜயேந்திர சுவாமிகள் அழைத்துவரப்படுகிறாா். இதில் கலந்துகொள்ளுமாறு பக்தா்களை ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் கேட்டுக்கொண்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு ஸ்ரீபாரத் சுப்ரமணியன் 9880404014 என்ற கைப்பேசி எண்ணை அணுகலாம் என்று ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT