பெங்களூரு

அடுத்த ஆண்டு முதல் பெங்களூரில் ஐபோன் உற்பத்தி: அமைச்சா் எம்.பி.பாட்டீல்

3rd Jun 2023 12:01 AM

ADVERTISEMENT

 

அடுத்த ஆண்டு முதல் பெங்களூரில் ஐபோன் உற்பத்தியை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொடங்கும் என்று கா்நாடக தொழில் துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பெங்களுரு, தேவனஹள்ளி அருகே ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இங்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி செய்யப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஐபோன் உற்பத்தி செய்யப்படும். ரூ.13,600 கோடி செலவில் தொடங்கப்படும் தொழிற்சாலையில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும். தொழிற்சாலை அமைப்பதற்கான 300 ஏக்கா் நிலம் ஜூலை 1ஆம் தேதி ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். நாளொன்றுக்கு 5 மில்லியன் தண்ணீா், தரமான மின்சாரம், சாலை போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்துதரும். நிலத்திற்கான 30 சதவீத நிதியான ரூ.90 கோடியை ஃபாக்ஸ்கான் அளித்துள்ளது. 3 கட்டங்களாக நிறுவன தொழிற்சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள ஃபாக்ஸ்கான், ஆண்டுக்கு 2 கோடி ஐபோன்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT