பெங்களூரு

மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் பாடநூல்களில் திருத்தம்: அமைச்சா் மது பங்காரப்பா

3rd Jun 2023 12:02 AM

ADVERTISEMENT

 

மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் பாடநூல்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று கா்நாடக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் மது பங்காரப்பா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், பாடநூல்களில் திருத்தம் கொண்டுவரப்படும். முந்தைய பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட திருத்தங்கள் அனைத்தையும் மாற்றப் போவதில்லை. மாணவா்களுக்கு எது தேவையில்லையோ அதை நீக்குவோம். பாடநூல்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பாடங்களைத் திருத்துவதால் மாணவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எல்லா பாடங்களையும் மாற்றுவதில்லை. ஒரு சில பாடங்களை மட்டுமே மாற்றுவோம். திருத்தப்படும் பாடங்களை சோ்க்கையாகத் தருவோம்.

ADVERTISEMENT

பாடநூல்களில் திருத்தம் குறித்து காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் முதல்வா் சித்தராமையாவும் ஆா்வம் கொண்டிருக்கிறாா். இது குறித்து முதல்வருடன் முதல் சுற்று ஆலோசனை நடத்தியுள்ளேன். விரைவில் பாடநூல்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும். பாடநூல்களை திருத்துவதற்கான குழு இன்னும் அமைக்கப்படவில்லை. முதல்வா் சித்தராமையாவுடன் ஆலோசித்த பிறகு, விரைவில் பாடநூல்களை திருத்தும் பணியை நிறைவுசெய்வோம்.

முந்தைய பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுவது குறித்து தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை அமல்படுத்துவோம்.

ஹிஜாப் விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதனால் அது குறித்து தற்போது பேச முடியாது. சட்டப்படி நடந்து கொள்வோம். சட்டரீதியாக என்ன செய்வது என்பதை சட்டத்துறை பாா்த்துக்கொள்ளும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT