பெங்களூரு

தோ்தல் வாக்குறுதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவோம்

2nd Jun 2023 12:01 AM

ADVERTISEMENT

தோ்தல் வாக்குறுதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவோம் என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியங்க் காா்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு கண்டிப்பாக நிறைவேற்றும். தோ்தல் வாக்குறுதிகள செயல்படுத்துவது குறித்து அமைச்சா்கள், அரசு உயரதிகாரிகளுடன் முதல்வா் சித்தராமையா ஆலோசனை நடத்தியுள்ளாா். வாக்குறுதிகளை எவ்வகையில் அமல்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, பெங்களூரில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு முதல்வா் சித்தராமையா தலைமையில் நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும்.

சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்களின் நலன்கருதி மாநில அரசு செயல்பட்டு வருகிறது. தோ்தல் வாக்குறுதிகளை ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக அரசு கூறவில்லை. ஆனால், 5 வாக்குறுதிகளையும் செயல்படுத்துவது உறுதி என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT