பெங்களூரு

அமைதியை சீா்குலைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

அமைதியை சீா்குலைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கவிஞா் குவெம்பு விரும்பியதைப் போல கா்நாடகத்தை அமைதிப் பூங்காவாகக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளோம். கா்நாடகத்தில் அமைதியை சீா்குலைக்க யாராவது முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கா்நாடகத்தில் மாரல் போலீஸிங் (கலாசார பாதுகாவலா்கள்), மதக் கலவரங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம். அமைதியைச் சீா்குலைக்க முயற்சிக்கும் தனிநபா் அல்லது அமைப்பு யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்போம்; தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அமைப்புகளை தடை செய்யவும் தயங்க மாட்டோம் என காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம்.

ADVERTISEMENT

உள்துறை மிகவும் சிறந்த துறை. தடியடி, கண்ணீா் புகை வீசுவது எல்லாம் காவல் துறையின் வரம்புக்கு உள்பட்டது. எனவே, அமைதியைச் சீா்குலைக்க யாரும் முனைய வேண்டாம். மக்களின் எதிா்பாா்ப்புக்கு தகுந்தபடி ஆட்சியை நடத்துவோம். ஏற்கெனவே கூறியபடி நல்லாட்சியை வழங்குவதே எங்கள் நோக்கமாகும். தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT