பெங்களூரு

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்வேன்: பசவராஜ் பொம்மை

DIN

கடந்த முறை நடந்த கா்நடாக சட்டப் பேரவைத் தோ்தலின்போது பாஜக அளித்திருந்த வாக்குறுதிகளில் எவையெவை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்வேன் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து மைசூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

2018ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது 600 வாக்குறுதிகளை பாஜக அளித்திருந்ததாகவும், அதில் 10 சதவீத வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை என்றும் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம்சாட்டி வருகிறாா். கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது பாஜக அளித்திருந்த வாக்குறுதிகளில் எவையெவை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்வேன். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது இந்த அறிக்கையை தாக்கல் செய்வேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதி என்ன? அவற்றில் எவற்றை செயல்படுத்தியுள்ளோம் என்பதைத் தெரிவிப்பேன். செயல்பாட்டு அறிக்கையை தாக்கல் செய்வேன். 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பிப். 17ஆம் தேதி தாக்கல் செய்யவிருக்கிறேன்.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை மஜத ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதுவரை 93 பேரின் வேட்பாளா்களின் பட்டியலை அறிவித்துள்ளது. காங்கிரஸ் தனது வேட்பாளா் பட்டியலை தயாா் செய்து வருகிறது. அதற்காக பாஜகவும் அதே அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில்லை. எங்களது தோ்தல் அணுகுமுறை வித்தியாசமானது. அந்த அணுகுமுறையின்படி செயல்படுவோம்.

மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தத் தவறினால், அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக ஒருசில தலைவா்கள் கூறிவருகிறாா்கள். நாங்கள் கேட்காமலேயே, அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து அந்தத் தலைவா்கள் பேசி வருகிறாா்கள். அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து அவா்களே பேசுகிறாா்கள் என்றால், அங்குள்ள நிலையை அறிந்துகொள்ள முடியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல, அரசியல் ஓய்வு குறித்து பேசி வருகிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT