பெங்களூரு

6800 போலி கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் கண்டுபிடிப்பு: ஒருவா் கைது

DIN

பெங்களூரில் 6800 போலி கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களை கண்டுபிடித்துள்ள போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை மாநகர காவல் ஆணையா் பிரதாப் ரெட்டி கூறியது:

கா்நாடகம் மற்றும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்களின் போலி மதிப்பெண் பட்டியல், கல்விச் சான்றிதழ்களை வழங்கிக்கொண்டிருந்த ராஜாஜி நகரின் நியூகுவெஸ்ட் டெக்னாலஜீஸ், ஜே.பி.நகரின் யஷ் சிஸ்டம்ஸ் குவெஸ்ட், பத்ரப்பா லேஅவுட்டின் ஆரோஹி இன்ஸ்டிட்யூட், தாசரஹள்ளியின் விஸ்வஜோதி கல்லூரி, விஜயநகரின் பெனகா கரஸ்பாண்டன்ஸ் கல்லூரி ஆகியவற்றில் மீது ஒரே நேரத்தில் மாநகர குற்றவியல் காவல்துறையினா் சோதனை நடத்தினா்.

இந்தச் சோதனையில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் போலி கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் என மொத்தம் 6800 ஆவணங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். இதில் கா்நாடகத்தின் 15 பல்கலைக்கழகங்களின் பியூசி, பட்டம், முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அடக்கம். இது தொடா்பாக வழக்கு பதிந்து, பகத் என்பவரை கைதுசெய்துள்ளோம். குவெஸ்ட் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தை பதிவுசெய்துகொண்டு, கணினி விற்பனை செய்வதாக அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த நிறுவனத்தின் 5 கிளைகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் 22 மடிக்கணினிகள், 13 ஸ்மாா்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறையாக கல்வி கற்காமல், போலி மதிப்பெண் பட்டியல்களை அவா் அளித்துள்ளாா். அதற்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வசூலித்து வந்துள்ளாா். பட்டப்படிப்புக்கான சான்றிதழையும் தயாரித்து வழங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்படும். இது போன்ற போலி சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT