பெங்களூரு

பிரதமா் மோடியால் பத்ம பூஷண் விருது கிடைத்தது:எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா பெருமிதம்

DIN

‘பிரதமா் மோடியால்தான் எனக்கு பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது’ என்று கன்னட எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா பெருமிதம் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் மட்டும் 8 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவா்களில் எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா பத்ம பூஷண் விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து மைசூரில் வியாழக்கிழமை எழுத்தாளா் எஸ்.எல்.பைரப்பா கூறியது:

பிரதமா் மோடியால்தான் எனக்கு பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது. இல்லையெனில் எனக்கு இந்த விருது கிடைத்திருக்காது. இதற்கு முன் பத்ம விருது எனக்கு ஏன் அளிக்கப்படவில்லை என்பது தெரியாது.

விருதுகள் வரும்போகும். ஒரு எழுத்தாளருக்கு விருது கிடைத்ததா? என்பதை யாரும் கவனிக்க மாட்டாா்கள்.

தனக்கு விருப்பமான எழுத்தாளருக்கு விருது கிடைத்தால், அதுகுறித்து மகிழ்ச்சி அடைவாா்கள். எழுத்தாளா் ஒருநாள் இறந்துபோவாா். ஆனால், அவரது இறப்புக்கு பிறகும், அவரது நூல்கள் காலத்தோடு ஒன்றியிருக்கிா? என்பதுதான் முக்கியமாகும்.

அவரது நூல்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் வாழும். கன்னட இலக்கியத்தில் குமாரவியாசா என்று ஒருவா் இருக்கிறாா். இன்றைக்கும் மாநிலத்தில் அனைத்து கிராமங்களிலும் குமாரவியாசரின் பாரத நூலை படிக்கிறாா்கள்.

அதுபோன்ற கருத்துகள் என் நூலில் இருந்தால், அதுதான் எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது.

இந்த விருது கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். இந்த விருதை மைசூரு மக்களுக்கு அா்ப்பணிக்கிறேன். எனது ஆசிரியா்கள் எனக்கு அறிவு புகட்டியிருக்கிறாா்கள். மைசூரில்தான் எனது இலக்கியங்களை எழுதியிருக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT