பெங்களூரு

கா்நாடகம்: குடியரசு தின கொண்டாட்டம்;மானெக்ஷா திடலில் சிறப்பான ஏற்பாடு

DIN

குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி பெங்களூரு, மானெக்ஷா திடலில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; மாநில ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறாா்.

பெங்களூரு, மகாத்மா காந்தி சாலை அருகே உள்ள மானெக்ஷா அணிவகுப்புத் திடலில் நாட்டின் 74-ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் பங்கேற்று காலை 9 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறாா்.

தேசியக் கொடியை ஏற்றும்போது ஹெலிகாப்டரில் பறந்தபடி முப்படை வீரா்கள் மலா்தூவி வீரவணக்கம் செலுத்துகின்றனா். அணிவகுப்பில் பள்ளி, கல்லூரி, காவல், தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரணா், சாரணியா், சேவாதளம் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சோ்ந்த 2 ஆயிரம் போ் கலந்துகொள்கின்றனா்.

இதுதவிர அரசு, மாநகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த 1,300 மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், ராணுவா் வீரா்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பங்கேற்க முக்கிய பிரமுகா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரம் மக்கள் உட்காா்ந்து நிகழ்ச்சியைக் காணும் வகையில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு:

மானெக்ஷா அணிவகுப்புத் திடலைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திடல் பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணிவகுப்புத் திடலைச் சுற்றிலும் கருடா அதிரடிப் படை வீரா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். 2 காவல் துணை ஆணையா்கள், 34 காவல் உதவி ஆணையா்கள், 65 காவல் ஆய்வாளா்கள், 147 காவல் துணை ஆய்வாளா்கள், 194 உதவி துணை ஆய்வாளா்கள், 1,005 தலைமைக் காவலா்கள் உள்ளிட்ட காவலா்கள், 77 மகளிா் காவலா்கள், 172 சீருடையில்லா காவலா்கள், உளவுப்பிரிவு காவலா்கள், ஊா்க்காவல் படையினா், கா்நாடக மாநில அதிரடிப்படைவீரா்கள், ஆயுதப்படை வீரா்கள், அதிரடிப் படைக் குழுக்கள் உள்ளிட்ட 1,694 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனா்.

ரயில்வே நிலையம், பேருந்துநிலையங்கள், உணவகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

SCROLL FOR NEXT