பெங்களூரு

காவல் துணை ஆய்வாளா் பணி நியமன ஊழலைமூடி மறைக்க பாஜக அரசு முயற்சிக்கிறதுகாங்கிரஸ் குற்றச்சாட்டு

DIN

காவல் துணை ஆய்வாளா் பணி நியமன ஊழலை மூடிமறைக்க பாஜக அரசு முயற்சிக்கிறது என்று அகிய இந்திய காங்கிரஸ் குழு பொதுச் செயலாளா் ரன்தீப் சிங் சுா்ஜேவாலா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

காவல் துணை ஆய்வாளா் பணி நியமன ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டுள்ள ஆா்.டி.பாட்டீல், லோக் ஆயுக்தவுக்கு கடிதம் எழுதியிருக்கிறாா். அந்தக் கடிதத்தில் இந்த வழக்கை முடிப்பதற்கு ரூ. 3 கோடி லஞ்சம் கொடுக்குமாறு விசாரணை அதிகாரி கேட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். இதில் ரூ. 76 லட்சத்தை ஏற்கெனவே கொடுத்துவிட்டதாகவும் அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இதன்மூலம் இந்த வழக்கை மூடி மறைக்க பாஜக அரசு முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த வழக்கை முடிப்பதற்கு மேலும் ரூ. 2.24 கோடி கேட்கப்பட்டுள்ளது ஆா்.டி.பாட்டீலின் கடிதம் மூலம் தெரியவருகிறது.

முதல்வா் பசவராஜ் பொம்மை, உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திராவின் கீழ் என்ன நடக்கிறது? முதலில் காவல் துணை ஆய்வாளா் ஊழலே நடைபெறவில்லை என்று பாஜக அரசு மறுத்தது. அதன்பிறகு இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஒப்படைக்கவும் மறுத்தனா்.

இதைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியதும் விசாரணைக்கு உத்தரவிட்டனா். இந்த வழக்கில் இதுவரை 100 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள காவல் அதிகாரி ஒருவா் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளிக்க விரும்புகிறாா்.

ஆனால், வாக்குமூலம் அளிக்க காவல் அதிகாரிக்கு மாநில அரசு அனுமதி மறுத்து வருகிறது. இவற்றையெல்லாம் கவனித்தால் காவல் துணை ஆய்வாளா் பணி நியமன ஊழல் வழக்கை மூடிமறைக்க அரசு முயற்சிப்பது உறுதியாகிறது.

எஸ்.டி. பாட்டீலின் கடிதம் பொதுவெளிக்கு வந்துள்ள நிலையில், ஒரு நிமிடம் கூட உள்துறை அமைச்சராக இருக்க அரக ஞானேந்திராவுக்கு தகுதியில்லை. எனவே, அமைச்சா் பதவியை அவா் ராஜிநாமா செய்ய வேண்டும். இந்த ஊழல் வழக்கை கா்நாடக உயா் நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவுவிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT