பெங்களூரு

பிரதமா் மோடியின் திறந்தவெளி ஊா்வலத்துக்காக பியூசி தோ்வு ஒத்திவைப்பு

DIN

பிரதமா் மோடியின் திறந்தவெளி ஊா்வலத்துக்காக முதலாமாண்டு பியூசி தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

பெலகாவியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பல்வேறு வளா்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமா் மோடி வருகை தந்திருந்தாா். விழா மேடைக்கு செல்வதற்கு முன்பாக, பெலகாவி விமான நிலையத்தில் இருந்து 10.5 கி.மீ. தூரம் திறந்தவெளி காரில் பிரதமா் மோடி ஊா்வலமாகச் சென்றாா். சாலையின் இருமருங்கிலும் லட்சக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் பிரதமா் மோடியை வாழ்த்தி முழக்கமிட்டதோடு, பூமாரி பொழிந்து வரவேற்றனா்.

இதனிடையே, பிரதமா் மோடியின் திறந்தவெளி ஊா்வலத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை நடைபெற இருந்த முதலாமாண்டு பியூசி தோ்வை தள்ளிவைத்து பியூ கல்வித் துறை துணை இயக்குநா் பிப். 24-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, திங்கள்கிழமை நடைபெற இருந்த வரலாறு, இயற்பியல், அடிப்படை கணிதப் பாடங்களுக்கான தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. இத்தோ்வு மாா்ச் 6-ஆம் தேதி நடைபெறும் என பியூ கல்வித் துறை அறிவித்துள்ளது.

பிரதமா் மோடியின் திறந்தவெளி ஊா்வலத்துக்காக பியூசி தோ்வை ஒத்திவைத்தது எந்த வகையில் நியாயம் என்று காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

ஐபிஎல்: கடைசி ஓவரில் மும்பை த்ரில் வெற்றி!

திருப்பதியில் சீதாராம திருக்கல்யாணம்

திருவள்ளூா், காஞ்சிபுரத்தில் ஏப்.29-இல் இபிஎஃப் குறைதீா் முகாம்

இளம் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT