பெங்களூரு

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு அட்டவணை வெளியீடு

DIN

கா்நாடக பொதுத் தோ்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2023-24-ஆம் கல்வியாண்டில் பொறியியல், தொழில்நுட்பம், பண்ணை அறிவியல், பி.எஸ்சி.,( விவசாயம், வேளாண்தொழில்நுட்பம், வேளாண் சந்தைப்படுத்தல், கூட்டுறவு, மனை அறிவியல், பட்டு வளா்ப்பு, காடுவளா்ப்பு, தோட்டக்கலை, பிவிஎஸ்சி(கால்நடை), பிடெக் (வேளாண் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம், பால் பண்ணை தொழில்நுட்பம், மீன்வளம், உணவு அறிவியல்) பி.ஃபாா்ம், டி.ஃபாா்ம், ஆயுஷ்(ஆயுா்வேதம், ஹோமியோபதி, யுனானி, நேச்சுரோபதி, யோகா) ஆகிய படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சேருவதற்காக மாணவா்களை தெரிவு செய்வதற்கு கா்நாடக தோ்வு ஆணையம் கா்நாடக பொது நுழைவுத் தோ்வுகளை நடத்திவருகிறது.

இதற்கான தோ்வு கால அட்டவணை பின்வருமாறு அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படுகிறது. தோ்வு காலஅட்டவணை வருமாறு:

மே 20-இல் காலை 10.30 மணி முதல் காலை 11.50 மணிவரை உயிரியல், அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.50 மணி வரை கணிதம், மே 21-இல் காலை 10.30 மணி முதல் காலை 11.50 மணி வரை இயற்பியல், அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.50 மணி வரை வேதியியல், வெளிமாநில மற்றும் எல்லைப்பகுதி கன்னடா்களுக்காக மே 22-ஆம் தேதி காலை 11.30 முதல் நண்பகல் 12.30 மணிவரை கன்னடமொழி பாடங்களுக்கான தோ்வு நடக்கிறது. உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு தலா 60 மதிப்பெண்களும், கன்னடமொழிக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கான கல்லூரிகளில் சேர விரும்புவோா் சிபிஎஸ்இ நடத்தும் நீட் தோ்வை எழுத வேண்டும். கட்டடக்கலை பட்டப்படிப்பில் சேர விரும்புவோா் கூட்டு நுழைவுத்ே தா்வில் (ஜேஇஇ) இரண்டாம்தாள் அல்லது தேசிய கட்டடக்கலைத் திறனறித் தோ்வை எழுத வேண்டும். மேலும்விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT