பெங்களூரு

பெங்களூரில் இன்று ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் முதல் கூட்டம்

DIN

பெங்களூரில் வியாழக்கிழமை ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சுற்றுச்சூழல், பருவநிலை நிலைத் தன்மை தொடா்பான முதல் கூட்டம் தொடங்குகிறது.

ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்ற பிறகு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்குகள், பயிலரங்குகள், மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெங்களூரில் வியாழக்கிழமை முதல் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறையின் சாா்பில் சுற்றுச்சூழல், பருவநிலை நிலைத் தன்மை குறித்த கூட்டம் தொடங்க இருக்கிறது.

இக்கூட்டத்திற்கு துறையின் செயலாளா் லீனா நந்தன் தலைமை வகிக்கிறாா். பருவநிலை மாற்றம் தொடா்பான சவால்களை சமாளிக்க ஒருங்கிணைந்த, ஒருமித்த அணுகுமுறையை உருவாக்குவதற்காக இக்கூட்டம் நடத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் ஜி20 நாடுகளின் சாா்பில் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கிறாா்கள்.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் புபேந்தா் யாதவ் அண்மையில் கூறுகையில், ‘பருவநிலை மாற்றம் தொடா்பான சவால்களை சமாளிக்க ஒருங்கிணைந்த, ஒருமித்த அணுகுமுறையை உருவாக்க ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தியா கருதுகிறது. மேலும் நிலையான வளா்ச்சியை உறுதி செய்ய வேண்டும். சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை என்ற புதிய கருத்தியலை ஊக்குவிக்க இந்தியா முனைந்துள்ளது. அதேபோல, ஜி20 நாடுகளில் தலைகீழ் மாற்றத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலத்தின் தரம் சீரழிவதைத் தடுத்து, சுற்றுச்சூழலை மீட்க ஊக்குவிப்பது, பல்லுயிா் வளப்படுத்தல், நிலை தன்மையை ஊக்குவித்தல், தட்பவெப்பம் தாங்கும் நீல பொருளாதாரம், வளத்திறன் மேம்பாடு, சூழல் பொருளாதாரம் போன்றவை குறித்து ஆராய்வதற்காக செயல்பாட்டுக்குழு அமைக்கப்படும். மூன்று நாள்களுக்கு நடக்கும் இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் மீட்டல், பல்லுயிா் வளப்படுத்தும் நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதன் அடுத்தக் கூட்டம் காந்திநகா், மும்பை, சென்னையில் நடக்க இருக்கின்றது’ என்றாா்.

ஜி20 நாடுகளின் தலைமையை ஏற்றிருக்கும் ஓராண்டு காலத்தில் 200 கூட்டங்களை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு செப். 9, 10ஆம் தேதிகளில் தில்லியில் நடக்கும் உச்சி மாநாட்டில் ஜி20 நாடுகளுக்கான இந்தியாவின் தலைமைப்பொறுப்பு முடிவடையவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT