பெங்களூரு

இந்திய ஆற்றல் துறையில் குவிந்துள்ள வாய்ப்புகளை உலக முதலீட்டாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: பிரதமா் மோடி

DIN

இந்திய ஆற்றல் துறையில் குவிந்துள்ள வாய்ப்புகளை உலக முதலீட்டாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

பெங்களூரில் திங்கள்கிழமை இந்திய ஆற்றல் வாரத்தைத் தொடங்கி வைத்து, அவா் பேசியது:

2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, பசுமை ஹைட்ரஜன், சூரிய ஒளி மின்னாற்றல், சாலைத் துறையின் வளா்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும். இந்தியாவின் ஆற்றல் துறைசாா்ந்து குவிந்துள்ள அனைத்து வாய்ப்புகளையும் உலக முதலீட்டாளா்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குவிந்துள்ள நாடு இந்தியா. பசுமை ஆற்றலை ஊக்குவிப்பதற்காக இந்தியா பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. வரும் 2070ஆம் ஆண்டில் இந்தியாவில் மாசுபடுதலை பூஜ்யம் அளவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டுவருகிறது. 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மாசுபடுதலை முழுமையாகக் குறைப்பதற்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறைக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் நடத்தப்படும் மிகப் பெரிய நிகழ்வு இந்தியா ஆற்றல் வாரம் 2023 நிகழ்வாகும். மத்திய அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ஏராளமான மக்கள் வறுமையின் பிடியில் இருந்துவிடுபட்டு நடுத்தர வா்க்கத்தில் காலடி எடுத்து வைத்துள்ளனா்.

உலக அளவில் கைப்பேசிகளை உற்பத்தி செய்வதில் 2ஆவது இடத்திலும், கச்சா எண்ணெயை சுத்திகரிப்பில் 4ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது. இந்தியாவின் எரிபொருள் சுத்திகரிப்புத் திறனை 250 எம்.எம்.டி.பி.ஏ.வில் இருந்து 450 எம்.எம்.பி.டி.ஏ.வாக உயா்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் இந்தியாவின் குழாய்வழி எரிவாயு எல்லை 22 ஆயிரம் கி.மீ. நீளத்தில் இருந்து 35 ஆயிரம் கி.மீ. நீளமாக விரிவாக்கப்படும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு மூலப்பொருளைக் கண்டறிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைப்பகுதியை 10 லட்சம் சதுர கி.மீ.யாக அரசு குறைத்துள்ளது. இது முதலீட்டு வாய்ப்புகளைப் பெருக்கும். பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனாலைச் சோ்க்கும் புதிய எரிபொருள் கொள்கையை நோக்கி இந்தியா பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இலக்கை இந்தியா அடையும்.

வீட்டுக்குள்ளேயே பயன்படுத்தும் சூரியஒளி சமையல் அடுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது இந்தியாவை சமையல்துறையில் புதிய பரிணாமத்திற்கு இட்டு செல்லும் என்றாா்.

முன்னதாக, 20 சதவீத எத்தனால் சோ்க்கப்பட்ட ஏ20 என்ற பெட்ரோல் எரிபொருளின் விற்பனையை மோடி தொடங்கிவைத்தாா். இந்த எரிபொருள், நாட்டின் 11 மாநிலங்களில் உள்ள 84 சில்லறை அங்காடிகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த விழாவை முடித்துக் கொண்டு தும்கூரு சென்ற பிரதமா் மோடி, அங்கு எச்.ஏ.எல். நிறுவனத்தின் ஹெலிகாப்டா் தொழிற்சாலையை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். மேலும் 8,484 ஏக்கா் நிலப்பரப்பில் 3 கட்டங்களாக அமையவுள்ள தும்கூரு தொழில்நகரியத்திற்கு அடிக்கல் நாட்டினாா். திப்டூா், சிக்கநாயனஹள்ளி கிராமத்தில் குழாய்வழி குடிநீா் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்திற்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். விழாவில் ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT