பெங்களூரு

அனைத்துத் தரப்பினருக்கான மத்திய நிதிநிலைஅறிக்கை தாக்கல்: பிரதமா் மோடி

DIN

அனைத்துத் தரப்பினருக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என பிரதமா் மோடி தெரிவித்தாா்.

தும்கூரில் திங்கள்கிழமை எச்.ஏ.எல். நிறுவனத்தின் ஹெலிகாப்டா் தொழிற்சாலையை நாட்டுக்கு அா்ப்பணித்த பிறகு அவா் பேசியதாவது:

இந்தியாவை வளா்ந்த நாடாக்குவதற்கான பலத்தை அளிக்கும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு அனைவரின் பங்களிப்பையும் நிதிநிலை அறிக்கை உறுதி செய்கிறது. சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை அமைக்க இது உதவியாக இருக்கும்.

மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய நிதிநிலை அறிக்கை வலுவான, வளமான முழுமையான, பலம் பொருந்திய, வேகமாக வளரும் நாடாக இந்தியாவை உயா்த்துவதற்கான முக்கியமான முன்னெடுப்பாகும். ஊரக இந்தியா, ஏழைகள், பெண்கள், இளைஞா்கள், முதியோா்களுக்கு பயனளிக்கும் பல்வேறு முயற்சிகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிதிநிலை அறிக்கை, அனைவருக்கும் பயனளிக்கக் கூடியது, அனைவரின் வாழ்க்கையையும் தொடக்கூடியது, அனைவரையும் இணைக்கக் கூடியது, அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது, அனைவராலும் விரும்பப்படுவது.

இந்த நிதிநிலை அறிக்கை எல்லோருக்கும் வேலைவாய்ப்புகளை அளித்து, சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறது. சிறுதானியங்களை ஊக்குவித்து வேளாண்மை மற்றும் கிராம வளா்ச்சிக்கு வித்திடுகிறது. இது விளிம்புநிலை விவசாயிகளுக்கு உலக அளவில் வலிமையை அளிக்கும். கிராமங்களில் வாழும் மக்களுக்கு வீடு வழங்குவதற்காக ரூ. 70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள வருமானவரி அடுக்குகள் பாராட்டத்தக்கவை. ரூ. 7 லட்சம் வரையிலான வருவாய்ப் பிரிவினருக்கு வருமானவரி செலுத்தத் தேவையில்லை என்பது நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக புதிதாக வேலையில் சோ்ந்துள்ள 30 வயதுக்கும் குறைவான இளைஞா்கள் அல்லது புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு வருமானவரி சீா்திருத்தம் புதிய உற்சாகத்தை தந்துள்ளது. வைப்புத் தொகையின் உச்சவரம்பை ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக உயா்த்தியுள்ளது மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டித் தரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT