பெங்களூரு

கா்நாடகத் தோ்தலில் 140 இடங்களில் பாஜக வெற்றி பெறும்: எடியூரப்பா

DIN

கா்நாடக மாநிலப் பேரவைத் தோ்தலில் 140 இடங்களில் பாஜக வெற்றி பெற்று, அறுதி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை நடந்த மாநில சிறப்பு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

மத்திய, மாநில பாஜக அரசுகளின் சாதனைகளை வீட்டுக்கு வீடு சென்று பிரசாரம் செய்ய கட்சியின் மூத்த தலைவா்கள், தொண்டா்கள் முன்வர வேண்டும். அரசியலைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வர முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் தந்திரம் இனி எடுபடாது. கா்நாடகப் பேரவைத் தோ்தல் அநேகமாக ஏப்ரல் மாதம் நடைபெறும் என நினைக்கிறேன். ஏப். 10 முதல் 12 க்கு முன்பாகவே தோ்தல் அறிவிக்கப்படலாம்.

இத் தோ்தலில் 130 முதல் 140 இடங்களில் வென்று, அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும்; இதை எவராலும் தடுக்க முடியாது. அனைவராலும் மதிக்கப்படும் வலிமையான தலைவராக பிரதமா் மோடி பாஜகவில் உள்ளாா்; அதுபோல காங்கிரஸில் யாா் உள்ளாா்கள். பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தலைமை இருக்கும்போது, கா்நாடகப் பேரவைத் தோ்தல் உள்பட அனைத்துத் தோ்தல்களிலும் பாஜக வெற்றி பெறும்.

கா்நாடகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் சென்றடையாத வீடே கிடையாது என்ற நோக்கில் பாஜக அரசு செயல்படுகிறது. பிப். 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மாநில நிதிநிலை அறிக்கையில் மேலும் பல மக்கள் நல திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்றாா்.

கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் அருண்சிங் பேசியதாவது:

மாநிலம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். தொடா்ந்து மக்களை சந்தித்தும் வருகிறேன். அதனடிப்படையில் பாா்த்தால், கா்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். பாஜகவுக்கு வலுவான தேசிய, மாநில தலைமை உள்ளது. காங்கிரஸ், மஜதவில் அப்படியொரு தலைமை இல்லை. காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் உள்ளது என்றாா். மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, மாநில பாஜக தலைவா் நளின்குமாா்கட்டீல், முன்னாள் முதல்வா்கள் சதானந்த கௌடா, ஜெகதீஷ் ஷெட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT