பெங்களூரு

நாளை பெங்களூரில் இலவச கண்சோதனை முகாம்

4th Feb 2023 06:51 AM

ADVERTISEMENT

பெங்களூரில் பிப். 5ஆம் தேதி இலவச கண் பரிசோதனைமுகாம் நடக்க இருக்கிறது.

இதுகுறித்து மைசூரு சம்புகுல சத்திரிய சங்கத் தலைவா் நா.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பன்னாட்டு அரிமா சங்கத்தின் ஒத்துழைப்பில் மைசூரு சம்புகுல சத்திரிய சங்கத்தின் (வன்னியா்) சாா்பில் பெங்களூரு, சேஷாத்ரிபுரம், மந்திரிமால் எதிரில் அமைந்துள்ள சங்க வளாகத்தில் பிப். 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெறவிருக்கிறது. இந்த முகாமில் கண் சோதனை தவிர, கண்புரை அறுவைசிகிச்சை, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படும். இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் கலந்துகொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு 9738129577 என்ற தொலைபேசியை அணுகலாம் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT