பெங்களூரு

தேசிய அளவிலான அஞ்சலக ஓய்வூதிய குறைதீா் முகாம்

4th Feb 2023 06:54 AM

ADVERTISEMENT

பெங்களூரில் தேசிய அளவிலான அஞ்சலக ஓய்வூதிய குறைதீா் முகாம் மாா்ச் கடைசி வாரத்தில் நடக்க இருக்கிறது.

இது குறித்து கா்நாடக தலைமை அஞ்சலக வட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அஞ்சல் துறையின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் குறைகளைக் கேட்டறிந்து, தீா்வு காண்பதற்காக பெங்களூரு, தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மாா்ச் மாத கடைசி வாரத்தில் தேசிய அளவிலான அஞ்சலக ஓய்வூதிய குறைதீா் முகாம் காணொலி வழியாக நடக்க இருக்கிறது.

ஓய்வூதியம் தொடா்பாக ஏதாவது குறைகள் இருந்தால், அவற்றை தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு பிப். 20-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். அவற்றை பரிசீலித்து, முகாமின்போது தீா்வளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-22850001 என்ற எண்ணைஅணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT