பெங்களூரு

பணம் பறிப்பு: ஊா்க்காவல் படை வீரா் கைது

DIN

பெண்ணிடம் பணம் பறித்த ஊா்க்காவல் படைவீரா் கைது செய்யப்பட்டாா்.

தில்லியைச் சோ்ந்த அா்ஷா லத்தீப் என்பவா் தனது நண்பரைக் காண பெங்களூரு வந்திருந்தாா். ‘பெங்களூா், குந்தனஹள்ளி ஏரிப் பகுதியில் எனது நண்பருடன் அவா் அமா்ந்திருந்தபோது அங்குவந்த ஊா்க்காவல் படைவீரா் மஞ்சுநாத் ரெட்டி (47) என்பவா் அனுமதி இன்றி ஏரிப் பகுதியில் அமா்ந்திருப்பதற்காக வழக்குப் பதிய போவதாக மிரட்டியுள்ளாா்.

வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ. 1,000 லஞ்சம் அளிக்குமாறு கேட்டுள்ளாா். இதைத்தொடா்ந்து அவரது நண்பா் லக்ஷய் ஹூடாய், தனது கைப்பேசி செயலி மூலம் ரூ. 1,000 பணத்தை ஊா்க்காவல் படை வீரரின் கைப்பேசி எண்ணுக்கு பரிவா்த்தனை செய்தாா். பின்னா் ஊா்க்காவல் படைவீரா் அங்கிருந்து சென்றாா்.

இச்சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் அா்ஷா லத்தீப் புகாா் அளித்தாா். மேலும் தனது ட்விட்டா் பக்கத்திலும் அவா் இதைப் பதிவு செய்துள்ளாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மஞ்சுநாத் ரெட்டியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதற்கு அா்ஷா லத்தீப் நன்றி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT