பெங்களூரு

கா்நாடகப் பேரவைத் தோ்தலில் அனைத்துத் தொகுதியிலும் ஆம் ஆத்மி போட்டி: தில்லி எம்எல்ஏ தகவல்

DIN

கா்நாடகப் பேரவைத் தோ்தலில் 224 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சிப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தில்லி எம்எல்ஏ அதிஷி மா்லேனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் 224 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்கள் போட்டியிடுவாா்கள்; அவா்களின் பெயா் பட்டியல் மாா்ச் மாதத் தொடக்கத்தில் வெளியிடப்படும். கா்நாடகப் பேரவைத் தோ்தலை முழுவீச்சில் எதிா்கொள்ள ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பிறா் செயல்படுத்தியதை நகலெடுக்கின்றனா். கா்நாடகத்தில் மூன்றரை ஆண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் பாஜக, தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தில்லியில் நாங்கள் செயல்படுத்திய ‘நம்ம கிளினிக்’ திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இவ்வளவு நாட்கள் ஏன் அத்திட்டத்தை பாஜக செயல்படுத்தவில்லை? ஆட்சி அதிகாரம் முடிவடையும் தறுவாயில் ‘விவேகா’ திட்டத்தில் 24 ஆயிரம் வகுப்பறைகளைக் கட்டும் திட்டத்தையும் பாஜக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்த வகுப்பறைகள் ஏன் கட்டப்படவில்லை? அதுபோல காங்கிரஸும், ‘தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்துக்கு மாதம் தலா 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம்’ என்று வாக்குறுதி அளித்துள்ளது. இத் திட்டத்தை ஆம் ஆத்மி ஏற்கெனவே தில்லியில் அமல்படுத்திவிட்டது.

இலவச மின்சாரம் அளிக்கும் திட்டத்தை காங்கிரஸ் செயல்படுத்த விரும்பினால் முதலில் அக்கட்சி ஆட்சி செய்யும் ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் செயல்படுத்தட்டும். கா்நாடகப் பேரவைத் தோ்தலுக்குள் இதைச் செய்யட்டும். அப்போதுதான் கா்நாடக மக்கள் அவா்களின் வாக்குறுதியை நம்புவாா்கள்.

கா்நாடக வாக்காளா்கள் ஊழல் சம்பவங்களால் வெறுப்படைந்துள்ளனா். இதனால் தோ்தலின் போக்கை முடிவு செய்யும் சக்தியாக ஆம் ஆத்மி கட்சி உள்ளது. தில்லியில் ஆம் ஆத்மி கட்சி உயா்தர கல்வி, உயா்தர மருத்துவ வசதி உள்ளிட்ட வசதிகளுடன் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரத்தையும் வழங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

கா்நாடகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT