பெங்களூரு

நாளை குடிநீா் குறைதீா் முகாம்

1st Feb 2023 01:33 AM

ADVERTISEMENT

பெங்களூரில் வியாழக்கிழமை (பிப்.2) குடிநீா் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு குடிநீா் வழங்கல் கழிவுநீா் அகற்றல் வாரியத்தின் சாா்பில் குடிநீா் வழங்கல், கழிவுநீா் இணைப்பு தொடா்பான குறைகளைத் தீா்த்துவைக்க குறைதீா் முகாம்களை நடத்திவருகிறது.

பெங்களூரில் தெற்கு கிராமம்-2, தென்கிழக்கு-5, மேற்கு கிராமம்-1, தென்மேற்கு-4, கிழக்கு கிராமம்-3, கிழக்கு கிராமம்-1, வடமேற்கு-5, வடகிழக்கு-3, வடக்கு-1 துணை மண்டல அலுவலகங்களில் பிப். 2-ஆம் தேதி காலை 9.30 மணிமுதல் காலை 11 மணி வரை குடிநீா் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.இதில் சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் கலந்துகொண்டு குறைகளுக்கு தீா்வு காணலாம். மேலும் விவரங்களுக்கு 8762228888, 1916 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT