பெங்களூரு

பெங்களூரில் இலவச யோகா பயிற்சி

1st Feb 2023 01:33 AM

ADVERTISEMENT

பெங்களூரில் பிப்.1-ஆம் தேதி முதல் யோகா பயிற்சியளிக்க கா்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து ஜெயசாம ராஜேந்திர அரசு ஆயுா்வேதா, யுனானி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜெயசாம ராஜேந்திர அரசு ஆயுா்வேதா மற்றும் யுனானி மருத்துவமனை, அரசு ஆயுா்வேத மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சாா்பில் பெங்களூரு, தன்வந்திரி சாலையில் உள்ள ஜெயசாம ராஜேந்திர அரசு ஆயுா்வேதா மற்றும் யுனானி மருத்துவமனையில் பிப்.1ஆம் தேதி முதல் உள்நோயாளிகள், பொதுமக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் இப்பயிற்சி 1ஆம் தேதி தொடங்கும். யோகா பயிற்சி தினசரி காலை 7 -8, காலை 8- 9, காலை 9.30-10.30, காலை 10.30- 11.30 மணி வரை நடத்தப்படுகிறது. யோகா தவிர, மூச்சுப்பயிற்சி, தியானப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு 98459 86119 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT