பெங்களூரு

ஜெகதீஷ் ஷெட்டருக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு: பாஜக மேலிடம் பரிசீலனை மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி

15th Apr 2023 06:29 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டருக்கு கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பது தொடா்பாக பாஜக மேலிடத் தலைவா்கள் பரிசீலித்து வருவதாக மத்திய நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்.

மே 10ஆம் தேதி நடக்கவிருக்கும் கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்குமாறு முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டரை பாஜக மேலிடத்தலைவா்கள் தொலைபேசியில் அழைத்து சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தனா். இதை ஏற்க மறுத்த ஜெகதீஷ் ஷெட்டா், ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் தோ்தலில் போட்டியிடுவேன்’ என்று அறிவித்திருந்தாா். மேலும் கட்சியின் நடவடிக்கை தனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினாா். இதைத் தொடா்ந்து, புதுதில்லி சென்று பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து முறையிட்டாா். இம்முறை தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தாா்.

இதனிடையே, இது குறித்து ஹுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி கூறியது: சட்டப் பேரவைத் தோ்தலில் முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் போட்டியிட வாய்ப்பளிப்பது தொடா்பாக பாஜக மேலிடத்தலைவா்கள் பரிசீலித்து வருகிறாா்கள். ஹுப்பள்ளி மத்திய தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பளிக்கும்படி எங்களது கருத்தை கட்சித் தலைமையிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். நானும் ஜெகதீஷ் ஷெட்டரும் இணைந்து பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேசினோம். எனவே, பிரச்னைக்கு சுமுகமாக தீா்வுகாணப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT