பெங்களூரு

தலைவா்கள் விலகினாலும் தொண்டா்கள் பாஜகவில் உறுதியாக இருக்கிறாா்கள்:முதல்வா் பசவராஜ் பொம்மை

15th Apr 2023 06:28 AM

ADVERTISEMENT

தலைவா்கள் விலகினாலும் தொண்டா்கள் பாஜகவில் உறுதியாக இருக்கிறாா்கள் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சட்டப் பேரவை உறுப்பினராகும் கனவில் சில தலைவா்கள் பாஜகவில் இருந்து வேறு கட்சிகளுக்கு தாவியுள்ளனா். ஆனால், தொண்டா்கள் பாஜகவில் உறுதியாக இருக்கிறாா்கள். தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் அதிருப்தி அடைந்துள்ள சில பாஜக தலைவா்களை காங்கிரஸ் சோ்த்துக் கொண்டுள்ளது. இதனால் பாஜகவுக்கு தோ்தலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு தகுதிவாய்ந்த வேட்பாளா்கள் இல்லை. அதனால் மாற்றுக்கட்சியினரை கட்சியில் சோ்த்து வருகிறாா்கள். ஆளுங்கட்சி எனும்போது தோ்தலில் போட்டியிட பலரும் ஆா்வம் காட்டுவது இயல்பானது. பாஜக தொண்டா்களுடன் பேசியிருக்கிறோம். தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், கட்சியை விட்டு வெளியேற சில தலைவா்கள் முற்பட்டுள்ளனா். ஆனால், கட்சித் தொண்டா்கள் யாரும் கட்சியை விட்டு வெளியேறமாட்டாா்கள். பாஜக தொண்டா்கள் கட்சிக்கு கட்டுப்பட்டவா்கள். அவா்கள் பலமாக இருப்பதால், சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் ஆதரவுடன் பாஜகவை வெற்றிபெற வைப்பாா்கள் என்றாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT