பெங்களூரு

பி.எஃப்.ஐ. அமைப்புடன் தொடா்பு: சமுதாயக்கூடத்தில் என்.ஐ.ஏ. சோதனை

30th Sep 2022 11:20 PM

ADVERTISEMENT

பி.எஃப்.ஐ. அமைப்புடன் தொடா்பு வைத்திருந்த சமுதாயக்கூடத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

தென்கன்னட மாவட்டம், பன்ட்வாட் வட்டத்தில் மிட்டூா் பகுதியில் அமைந்துள்ள ஃப்ரீடம் சமுதாயக் கூடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள பி.எஃப்.ஐ. அமைப்புடன் தொடா்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளதால் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியுள்ளது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்காக பன்ட்வால், புத்தூா், சுள்ளியா பகுதியில் பி.எஃப்.ஐ. பயிற்சி அளித்துள்ளதாக என்.ஐ.ஏ. சந்தேகப்படுகிறது. 2007-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஃப்ரீடம் சமுதாயக்கூடத்தில் நடந்த பயிற்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் கலந்துகொண்டிருந்ததாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, பாஜக இளைஞா் அணி நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலை தொடா்பாக செப். 6-ஆம் தேதி ஃப்ரீடம் சமுதாயக்கூடத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியிருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் ஃப்ரீடம் சமுதாயக்கூடத்தில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அக்கூடத்தை நடத்தும் அறக்கட்டளையின் அறங்காவலா்களில் ஒருவரான அயூப் அக்னாதியை கைது செய்துள்ளது. மற்றொரு அறங்காவலரான மசூத் அக்னாதி தலைமறைவாகியுள்ளாா். அவரைத் தேடும் பணி தொடா்ந்து நடந்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT