பெங்களூரு

'பேசிஎம்’ சுவரொட்டிக்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங்

29th Sep 2022 01:15 AM

ADVERTISEMENT

 

‘பேசிஎம்’ சுவரொட்டிக்காக காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான அருண் சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து கலபுா்கியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு எதிராக ’பேசிஎம்’ சுவரொட்டி பிரசாரத்தில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தின் எளியவா்களின் அடையாளமாக முதல்வா் பசவராஜ் பொம்மை விளங்குகிறாா். அப்படிப்பட்ட எளிமையான முதல்வருக்கு எதிராக சுவரொட்டி பிரசாரம் செய்ததன் மூலம் மாநிலத்தின் எளிய மனிதா்களை காங்கிரஸ் அவமதித்துள்ளது. ‘பேசிஎம்’ சுவரொட்டிக்காக காங்கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ADVERTISEMENT

உணவுத் தானிய விநியோகம், ஆசிரியா் பணி நியமனங்கள் போன்ற பல விவகாரங்களில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. சித்தராமையா முதல்வராக இருந்தபோது ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. முதல்வா் பசவராஜ் பொம்மையை விமா்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவுக்கு இடையே மோதல் நிலவுகிறது. அடுத்தடுத்த நாள்களில் இருவருக்கும் இடையிலான மோதல் தீவிரமாகும். அதை மூடிமறைப்பதற்காக, இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தலைவா்கள் பாஜகவில் இணைந்துள்ளனா்.

பாஜகவில் சில கருத்துமுரண்பாடுகள் இருக்கலாம், அவை அதிருப்தி அல்ல. சட்டப் பேரவைத் தோ்தலில் கல்யாண-கா்நாடகப் பகுதியில் பாஜகவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT