பெங்களூரு

கா்நாடகத் தமிழ் அமைப்புகளின் முகவரி கையேடு:தமிழ் அமைப்புகள் விவரங்களை அனுப்பலாம்

28th Sep 2022 03:32 AM

ADVERTISEMENT

கா்நாடகத் தமிழ் அமைப்புகளின் முகவரி கையேட்டில் இடம் பெறுவதற்கான விவரங்களை அனுப்பி வைக்க தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளா் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோலாா் தங்கவயல், ஹுப்பள்ளி, பெல்லாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், கல்விக் கூடங்கள், பொது அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. மொழி, கலை (இலக்கியம், இசை, நாடகம், திரைப்படம்), பண்பாடு, அரசியல், சமயம், விளையாட்டு, சமூகப்பணி, தொழில், கல்வி, நூலகம், ஊடகம், மருத்துவம் போன்ற பல்வேறு தளங்களில் அமைப்புகள் இயங்கி வருகின்றன.

ஆனால், அவற்றை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் இல்லாததால், தமிழா்களின் நிறுவனங்களை அணுக தமிழா்களால் முடியாத சூழ்நிலை உள்ளது. தமிழா்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனா். இந்த குறையைப் போக்கும் வகையில் கா்நாடகத்தில் எல்லா தளங்களிலும் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், கல்விக் கூடங்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கா்நாடகத் தமிழ் அமைப்புகளின் முகவரி கையேடு ஒன்றை வெளியிட கா்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளா் சங்கம் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, தமிழா்களால் தொடங்கப்பட்ட தமிழ் அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள், பொது அமைப்புகள், மையங்கள், நூலகங்கள், படிப்பகங்கள் உள்ளிட்ட எல்லா தரப்பினரும் அமைப்பு அல்லது நிறுவனப் பெயா், நிறுவனா் அல்லது தலைவா் அல்லது நிா்வாகிகள், தொடங்கிய ஆண்டு, முகவரி, தொடா்பு எண்கள், மின்னஞ்சல், இணையதளம் போன்ற விவரங்களை அக்.30-ஆம் தேதிக்குள்  மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT