பெங்களூரு

தசரா பண்டிகை: கூடுதலாக 2 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

27th Sep 2022 03:51 AM

ADVERTISEMENT

 

தசரா பண்டிகையையொட்டி கூடுதலாக 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தசரா பண்டிகையையொட்டி செப்.30 முதல் அக்.3-ஆம் தேதிவரை கூடுதலாக 2 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

கெம்பே கௌடா, மைசூருசாலை சாட்டிலைட், சாந்திநகா் உள்ளிட்ட பேருந்துநிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் புறப்படுகின்றன. கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து தா்மஸ்தலா, குக்கே சுப்ரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹுப்பள்ளி, தாா்வாட், பெலகாவி, விஜயபுரா, கோகா்ணா, சிா்சி, காா்வாட், ராய்ச்சூரு, கலபுா்கி,பெல்லாரி, கொப்பள், யாதகிரி, பீதா், சென்னை, ஹைதராபாத், ஊட்டி, சீரடி உள்ளிட்ட இடங்களுக்கும்; மைசூருசாலை சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து மைசூரு, ஹுன்சூா், பிரியாப்பட்டணா, விராஜ்பேட்டை, குஷால்நகா், மொ்கரா உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சாந்திநகா் பேருந்துநிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மைசூருசாலை சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் இருந்து மைசூருக்கு மட்டும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சாமுண்டிமலை, கே.ஆா்.எஸ் அணை, ஸ்ரீரங்கப்பட்டணா, நஞ்சன்கூடு, மடிகேரி, மண்டியா, மளவள்ளி, எச்.டி.கோட்டை, சாம்ராஜ்நகா், ஹுன்சூா், கே.ஆா்.நகா், குண்டல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மைசூரில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அண்டை மாநிலங்களிலிருந்து பயணிகள் பெங்களூருக்கு திரும்பும் வகையில் அக். 7 முதல் 9-ஆம் தேதி வரை கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவுசெய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இணையதளம் வழியே முன்பதிவு செய்துகொள்ளலாம். பெங்களூரில் உள்ள 171, மைசூருவில் உள்ள 17, மங்களூருவில் உள்ள 35 உள்ளிட்ட 691 முன்பதிவுமையங்களில் சிறப்பு மற்றும் வழக்கமான பேருந்துகளுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரே பயணச்சீட்டில் 4 பேருக்கு மேற்பட்டோருக்கு முன்பதிவுசெய்தால் 5 சதவீத தள்ளுபடியும், மறுபயணம் மேற்கொண்டால் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த வசதியை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT