பெங்களூரு

டிப்ளமோ மாணவா்கள் பொறியியல் கல்லூரியில் சேர நுழைவுத்தோ்வு: அக். 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

27th Sep 2022 03:51 AM

ADVERTISEMENT

 

டிப்ளமோ மாணவா்கள், பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் பொது நுழைவுத்தோ்வில் பங்கேற்க அக். 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படித்துள்ள மாணவா்கள், லேட்டரல் என்ட்ரி திட்டத்தின்கீழ் பொறியியல் கல்லூரிகளில்(பகல் மற்றும் மாலை) 2-ஆம் ஆண்டு 3-ஆவது செமஸ்டரில் சோ்க்கை பெறுவதற்காக பொதுநுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது. வெகுவிரைவில் நடக்கவிருக்கும் இந்த தோ்வில் பங்கேற்கவிரும்பும் டிப்ளமோமாணவா்களிடமிருந்து அக்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அக். 7-ஆம் தேதிக்குள் தோ்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பிறகு தோ்வுநுழைவுச்சீட்டை இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பின்னா் அறிவிக்கப்படவுள்ள தோ்வுநாளில் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அன்று அனைத்து மாணவா்களுக்கும் பொது நுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது. பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிவரை வெளிமாநில மற்றும் எல்லைப்பகுதி கன்னட மாணவா்களுக்கு பெங்களூரில் மட்டும் கன்னட மொழிப்பாட தோ்வுநடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT