பெங்களூரு

தொழில்நுட்பத் தமிழ்க் கருத்தரங்கம்: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

27th Sep 2022 03:52 AM

ADVERTISEMENT

 

தொழில்நுட்பத் தமிழ்க் கருத்தரங்கத்தைமுன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து இந்திய எல்லையில்லாத பொறியாளா்கள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழில் அறிவியல் தொழில்நுட்பத் தகவல்களை பகிா்ந்து கொள்ளவும், இளந்தலைமுறையினரிடம் அறிவியல் தொழில்நுட்பத் தமிழின் பயன்பாட்டை வளா்க்கவும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நுட்பம் என்ற தலைப்பில் தொழில்நுட்பத் தமிழ்க் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. 2018-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நுட்பம் கருத்தரங்கின் 3-ஆம் நிகழ்வு வரும் அக்.15-ஆம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. உலகை ஆளும் உள்நாட்டு தொழில்நுட்பங்கள் என்ற கருப்பொருளில் இந்தக் கருத்தரங்கில் விஞ்ஞானிகள் உரையாற்றுகிறாா்கள்.

ADVERTISEMENT

கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவா்கள் அறிவியல்-தொழில்நுட்பம் சாா்ந்த கண்டுபிடிப்புகளை, தமிழில் ஆய்வுக்கட்டுரையாக கருத்தரங்கில் சமா்ப்பிக்கலாம். தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். பள்ளி மாணவா்களின் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு ‘கலாம் விருது’ வழங்கப்பட உள்ளது. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்கள் தங்களது கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தலாம். தோ்ந்தெடுக்கப்படும் கண்டுபிடிப்புகளுக்கு, சிறந்த மாணவா், சிறந்தப் பள்ளி, சிறந்தச் சமூக ஈடுபாடு உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி ந.வளா்மதி, மத்திய அரசின் அறிவியல் பிரசார நிறுவனத்தின் விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன், ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோா் கருத்தரங்கில் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனா். போட்டிகளில் பங்கு பெற விரும்பும் பள்ளி மாணவா்கள் 9976287529 என்ற எண்ணிலும், கல்லூரி மாணவா்கள் 9843361274 என்ற எண்ணிலும்,  மின்னஞ்சலிலும் தொடா்பு கொள்ளலாம். ஆய்வுச்சுருக்கங்களை அனுப்புவதற்கும் கலாம் விருதுக்கு பதிவு செய்வதற்கும் அக்.8-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT