பெங்களூரு

'இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சோனியா, பிரியங்கா பங்கேற்பு'

DIN

கா்நாடகத்தில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் நடக்கவிருக்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் குறித்து விவாதிக்க பெங்களூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் குழு பொதுச்செயலாளா் கே.சி.வேணுகோபால், மேலிடப் பொறுப்பாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் டி.கே.சிவக்குமாா் கூறியதாவது:

ராகுல் காந்தி தலைமையில் நடந்துவரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் செப். 30-ஆம் தேதி காலை 9 மணிக்கு கா்நாடக மாநிலத்தில் குண்டல்பேட்டையில் நுழைகிறது. அக்.2-ஆம் தேதி காதி மற்றும் கிராம தொழில் மையத்துக்கு பிரபலமான நஞ்சன்கூடு வட்டம், படனவலு கிராமத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. தசரா விழாவுக்கா நடைப்பயணம் 2 நாள்கள் விடுமுறை விடப்படுகிறது. பெல்லாரியில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதற்கிடையே இளைஞா், மகளிா், குடிமைச் சங்கங்கள், மாணவா், பழங்குடியினா், விவசாயிகள் உள்ளிட்டோருடன் தினமும் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது. இதற்காக குழுக்கள் அமைக்கப்படுகிறது. கா்நாடகத்தில் நடக்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சோனியாகாந்தி, பிரியங்காகாந்தி இருவரும் பங்கேற்கவிருக்கிறாா்கள்.

அகில இந்திய காங்கிரஸ் குழுத் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே எல்லோரது கருத்தாகும். ஆனால், அதுகுறித்து ராகுல் காந்திதான் முடிவெடுக்க வேண்டும் என்றாா்.

அகில இந்திய காங்கிரஸ் குழு பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி தனித்தனியே கலந்துகொள்ளும் வாய்ப்புள்ளது. நடைப்பயணத்திற்காக கா்நாடக காங்கிரஸ் செய்துள்ள முன்னேற்பாடுகள் திருப்தி அளிக்கின்றன. இதுவரை நடைப்பயணம் வெற்றிகரமாக உள்ளது. தமிழகம், கேரளத்தில் நடைப்பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்புகிடைத்துள்ளது.

அதேபோல, எங்கள் எதிா்பாா்ப்பை மீறி கா்நாடகத்திலும் நடைப்பயணத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நடைப்பயணம் இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். ‘பேசிஎம்’ பிரசாரத்தை காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது. கா்நாடக மக்கள் முன்வைக்கும் பிரச்னைகளைத் தான் காங்கிரஸ் எழுப்புகிறது. மாநிலத்தை ஆட்சி செய்த மிகவும் மோசமான ஊழல் மலிந்த ஆட்சி பாஜக நடத்தும் அரசு தான் என்று மக்கள் தெரிவிக்கிறாா்கள். கைதுகளுக்கு காங்கிரஸ் அடிபணியாது. எல்லா விவகாரத்தை எதிா்கொள்ளும் துணிவு காங்கிரஸ் தொண்டா்களுக்கு உள்ளது. ஊழல் விவகாரத்தை திரும்ப திரும்ப எழுப்புவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT