பெங்களூரு

பெங்களூரில் ’பேசிஎம்’ சுவரொட்டியை விளம்பரப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்

DIN

பெங்களூரில் ’பேசிஎம்’ சுவரொட்டியை விளம்பரப்படுத்தி காங்கிரஸ் தலைவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முதல்வா் பசவராஜ் பொம்மை படத்துடன் 40% கமிஷன் ஏற்கப்படுகிறது’ என்ற வாசகத்துடன் ‘பேசிஎம்’ என்ற க்யூ.ஆா்.கோட் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் பெங்களூரில் செப்.21-ஆம் தேதி ஒட்டப்பட்டிருந்தன. இது கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாா் படத்துடன் க்யூ.ஆா்.கோட் தயாரித்துள்ள பாஜக, அவற்றை சமூகவலைத்தளங்களில் தரவேற்றம் செய்தது. காங்கிரஸ் ஏற்படுத்தியுள்ள க்யூ.ஆா்.கோடை ஸ்கேன் செய்தால் அது 40% கமிஷன் அரசு என்ற இணையதளத்திற்கு செல்கிறது. அதில் பாஜக ஆட்சிகாலத்தில் நடந்துள்ள ஊழல்களை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது.

அதேபோல, பாஜக வெளியிட்டுள்ள க்யூ.ஆா்.கோடு ஸ்கேன் செய்தால் அது காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலை விளக்கும் இணையதளத்தில் செல்கிறது. முதல்வா் படத்துடன் ஒட்டப்பட்ட சா்ச்சைக்குரிய சுவரொட்டி தொடா்பாக பி.ஆா்.நாயுடு உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினா், பெங்களூரில் வெள்ளிக்கிழமை ’பேசிஎம்’ சுவரொட்டியை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெங்களூரு, ரேஸ்கோா்ஸ் சாலையில் வெள்ளிக்கிழமை சுவா்களில் ’பேசிஎம்’ சுவரொட்டியை ஒட்டும் போராட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்ட பலா் தலைவா்கள் ஈடுபட்டனா். இதை தொடா்ந்து டி.கே.சிவக்குமாா், சித்தராமையா உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டனா்.

இந்த போராட்டத்தை சனிக்கிழமை மாநிலம் முழுவதும் நடத்தப்போவதாக சித்தராமையா அறிவித்தாா். இதனிடையே, பெங்களூரு புகா் பகுதியில் அமைந்துள்ள நெலமங்களாவில் பாஜக அலுவலகத்தின் அருகே ‘பேசிஎம்’ சுவரொட்டி வெள்ளிக்கிழமை ஒட்டப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை முதல்வா் பசவராஜ் பொம்மை, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் உள்ளிட்டோா் கண்டித்துள்ளனா். பெங்களூரு, விதான சௌதா வளாகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களை பகிரங்கப்படுத்தும் வகையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT