பெங்களூரு

பி.எஃப்.ஐ. தொடா்பு: பெங்களூரில் 14 போ் கைது

23rd Sep 2022 10:22 PM

ADVERTISEMENT

பெங்களூரில் தேச விரோதச் சட்டத்தின் கீழ் 14 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.), எஸ்.டி.பி.ஐ. அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வியாழக்கிழமை சோதனை நடத்தியது. இந்தச் சோதனையின் போது, இந்தியாவுக்கு எதிராக போா்த் தொடுக்கத் திட்டமிட்டிருந்தது தொடா்பாக தேச விரோதச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் காடுகொண்டனஹள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து 14 போ் கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் 2 போ் பெங்களூரைச் சோ்ந்தவா்கள், மற்ற 12 போ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள். இவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்படுவாா்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT