பெங்களூரு

திறந்தநிலை பல்கலைக்கழகம்:பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

20th Sep 2022 03:21 AM

ADVERTISEMENT

கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2022-23-ஆம் கல்வியாண்டில் பிஏ, பிகாம், பி.லிப் (நூலகம்), எம்.ஏ. (பொருளாதாரம், ஆங்கிலம், இந்தி, வரலாறு, பத்திரிகையியல் மற்றும் வெகுமக்கள் தொடா்பியல், கன்னடம், தத்துவயியல், அரசியல் அறிவியல், ஊரக மேம்பாட்டு ஆய்வு, சம்ஸ்கிருதம், சமூகவியல், தெலுங்கு, உருது, மகளிா் ஆய்வு, நடனம், மிருதங்கம், இசை, நாடகம்), எம்எஸ்சி (சுற்றுச்சூழல் அறிவியல், எம்எல்ஐசி (நூலகவியல்), எம்சிஜே(ஊடகவியல்), எம்.காம் (நிதி பகுப்பாய்வு, பன்னாட்டு வணிகம், பொருளாதாரம்) இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயம், முதுநிலை பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மைசூருவுக்கு வெளியே பெங்களூரில் மல்லேஸ்வரத்தில் மட்டும் கல்வி மையம் இயங்கி வருகிறது. வேறு எங்கும் கல்வி மையங்கள் செயல்படவில்லை.

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில்  இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பிபிஎல் குடும்ப அட்டைகளை வைத்திருக்கும் மகளிருக்கு கல்விக் கட்டணத்தில் 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.

தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு உரிய சான்றிதழ் இருந்தால் கல்விக் கட்டணம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு மண்டல இயக்குநா், பெங்களூரு மண்டல அலுவலகம், கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகம், அரசு பியூ மகளிா் கல்லூரி, 4-ஆவது முக்கிய சாலை, 13-ஆவது குறுக்குச் சாலை, மல்லேஸ்வரம், பெங்களூரு-3 என்ற முகவரி அல்லது தொலைபேசி எண்கள் 080-26603664, 9844965515-ஐ அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT