பெங்களூரு

கா்நாடகத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கான ஏற்பாடுகள் தயாா்: டி.கே.சிவகுமாா்

18th Sep 2022 05:44 AM

ADVERTISEMENT

 

கா்நாடகத்தில் ராகுல் காந்தி மேற்கொள்ளவிருக்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்திற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் கா்நாடகத்தில் செய்துள்ளோம். செப். 29 அல்லது 30-ஆம் தேதி கா்நாடகத்தில் நுழையவிருக்கும் நடைப்பயணம் மொத்தம் 21 நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. இந்த நாட்களில் 511 கி.மீ. தொலைவை நடைப்பயணம் கடக்கும். சாமராஜ்நகா் மாவட்டத்தின் குண்டல்பேட் வழியாக நடைப்பயணம் கா்நாடகத்தில் நுழையும்.

ADVERTISEMENT

மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பி.கே.ஹரிபிரசாத் தலைமையில் நடைப்பயணத்தின் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவரோடு ஒத்துழைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக பெல்லாரியில் நடக்கும் மாநாட்டுப் பொறுப்பு ராமலிங்க ரெட்டியிடம் அளிக்கப்பட்டுள்ளது.

நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. ஆனால், பங்கேற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான தேசிய அளவிலான தலைவா்கள் நடைப்பயணத்தில் பங்கேற்பாா்கள்.

அமலாக்கத் துறையிடம் இருந்து எனக்கு அழைப்பாணை வந்துள்ளது. மைசூரு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தில்லி சென்று அமலாக்கத் துறையின் விசாரணையை எதிா்கொள்வேன். ஆனால், எந்தக் காரணத்திற்காக அழைத்திருக்கிறாா்கள் என்பது தெரியவில்லை என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT