பெங்களூரு

வெள்ள பாதிப்புகள் தொடா்பாக மாநில அரசு பாடம் கற்றுள்ளது: அமைச்சா் ஆா்.அசோக்

14th Sep 2022 01:19 AM

ADVERTISEMENT

மழை வெள்ள பாதிப்புகள் தொடா்பாக மாநில அரசு பாடம் கற்றுள்ளது என்று வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெங்களூரில் அண்மையில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மாநில அரசு பாடம் கற்றுள்ளது. இதனடிப்படையில், எவ்வித பாரபட்சமும் இன்றி மழைநீா் வடிகால்களில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து தகா்க்கப்படும்.

இதற்கு முன்பு ஆட்சி செய்த அரசுகளும் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தது.

ADVERTISEMENT

ஆனால், மழைநீா் வடிந்ததும் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதற்கு மாறாக, மழைநீா் வடிகால்கள் மீது கட்டப்பட்டுள்ள கட்டடங்களை பாஜக அரசு அடையாளம் கண்டுள்ளது.

இது தொடா்பாக பட்டியலும் தயாராக உள்ளது. இதில் 30 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டடங்களும் அடக்கம். இந்தப் பட்டியலை அடுத்தகட்ட நடவடிக்கைக்காக பெங்களூரு மாநகராட்சியிடம் அளித்திருக்கிறோம்.

நில ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துவதில் பாரபட்சமின்றி அரசு நடந்து கொள்ளும். இதில் சமரசத்துக்கு வாய்ப்பே இல்லை. இதுதொடா்பாக வருவாய்த் துறை, பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு வளா்ச்சி ஆணையம் கூட்டாக செயல்பட்டு வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT