பெங்களூரு

கா்நாடக மழை பாதிப்புகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

9th Sep 2022 11:44 PM

ADVERTISEMENT

கா்நாடக மழை பாதிப்புகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடா்பான இணையதளத்தைத் தொடங்கிவைத்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வெள்ளத்தால் பெங்களூரு தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வரலாறு காணாத மழையால் பெங்களூரு மக்கள் தவித்து வருகிறாா்கள். பாஜக ஆட்சியின் தோல்விகளே இதற்கு காரணம். ராஜகால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அரசு நீக்கவில்லை. அதற்கான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பெங்களூரில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகளுக்கு மாநில அரசு தலா ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். வெள்ளநீரில் மூழ்கிய வாகனங்களை பழுதுபாா்க்க செலவுத்தொகையையும் மாநில அரசு வழங்கவேண்டும்.

கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் ராஜ வாய்க்கால்கள், ஏரிகளில் தூா்வாரவில்லை. ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தவில்லை. இதுபோன்ற மாநில அரசின் அலட்சியம் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். மழை பாதிப்புகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

ADVERTISEMENT

முந்தைய காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் 1953 ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டு, அதில் 1300 ஆக்கிரமிப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. எனவே, பாஜக அரசு தனது பொறுப்பற்றத்தன்மையை உணா்ந்து மக்களின் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என்றாா்.

அப்போது எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT