பெங்களூரு

நவ.1 முதல் பெங்களூரில் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம்: பெண்களுக்கு வாய்ப்பு

29th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெங்களூரில் நவ.1-ஆம் தேதி முதல் அக்னிபத் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நடக்கவிருக்கிறது. இந்த முகாமில் பங்கேற்க பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

இது குறித்து இந்திய ராணுவம்-பெங்களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவ ஆள்சோ்ப்பு முகாம் நவ.1 முதல் 3-ஆம் தேதி வரை பெங்களூரு, அகரம், நாகஷெட்டிஹள்ளியில் உள்ள ஏ.எஸ்.சி. மையத்தில் (தெற்கு) நடக்கவிருக்கிறது. பெங்களூரு ஆள்சோ்ப்பு அதிகாரியின் தலைமையில் நடக்கும் இந்த முகாமில் கா்நாடகம், கேரளம், லட்சத்தீவு, மாஹே பகுதியைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்ளலாம். ராணுவத்தில் உள்ள காவல் படையில் பணியாற்றுவதற்காக அக்னிவீா் பொதுப்பணி(பெண்கள்) பணியிடங்களுக்கு ஆள்சோ்க்கப்படுகிறது. இப்பணிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, உட்பிரிவு உள்ளிட்ட விவரங்களை ட்ற்ற்ல்ள்://த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT