பெங்களூரு

பெங்களூரில் நிகழாண்டு கூடுதல் மழை:10 மாதங்களில் 1,709 மி.மீ. மழைப் பதிவு

19th Oct 2022 02:07 AM

ADVERTISEMENT

நிகழாண்டில் பெங்களூரில் வழக்கத்தைவிட கூடுதல் மழை பெய்துள்ளது. கடந்த 10 மாதங்களில் 1,709 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பெங்களூரில் அதிக மழைபெய்து வருகிறது. பெங்களூரில் ஆண்டுக்கு சராசரியாக 980 மி.மீ. மழை பெய்யும். ஆனால், நிகழாண்டில் ஜன.1 முதல் அக்.18-ஆம் தேதிவரையில் பெங்களூரில் வழக்கத்தைவிட 105 மி.மீ. கூடுதலாக 1,709.1 மி.மீ. மழை பெய்துள்ளது.

இது 2017-இல் பதிவாகியிருந்த 1,696 மி.மீ. மழையை விட கூடுதலாகும். 2019-இல் 900 மி.மீ. ஆக பதிவாகியிருந்த மழை, 2020-இல் 1,200 மி.மீ. ஆகவும், 2021-இல் 1,500 மி.மீ. ஆகவும் பதிவாகியிருந்தது. நிகழாண்டின் தொடக்கத்தில் இருந்தே பெங்களூரில் அதிக மழை பெய்தது.

வழக்கத்துக்கு மாறாக குளிா்காலம், கோடைகாலத்திலும் பலத்த மழை பெய்தது. அதேபோல, ஜூன் மாதத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதும் பலத்த மழை பெய்தது. 1981 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பெங்களூரில் சராசரியாக 986.1 மி.மீ. மழை பதிவானது.

ADVERTISEMENT

ஆனால், 2010-ஆம் ஆண்டு முதல் மழை அளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. 2010 முதல் 2021ஆம் ஆண்டுவரையிலானகாலக்கட்டத்தில் சராசரியாக 1,146.62 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 16 சதவீதம் கூடுதலாகும். 2020-ஆம் ஆண்டுக்கு மழை அளவு 1,200 மி.மீ. கடந்துள்ளது.

கடந்த செப்.5-ஆம் தேதி இரவில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு 131.6 மி.மீ. மழை பெய்து பெங்களூரை கதிகலங்க வைத்துள்ளது. ஆண்டின் மொத்த மழை அளவில் மாா்ச் முதல் மே மாதங்களில் மட்டும் 421 மி.மீ., ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் 525 மி.மீ. மழை பொழிந்திருக்கிறது.

இது குறித்து வானிலை ஆய்வுமைய மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நிகழாண்டில் பெய்துள்ள மழை வரலாறு காணாதது. கோடைகாலத்தில் மட்டும் 421 மி.மீ. மழை பதிவானது என்றாா்.

........

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT