பெங்களூரு

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் விபத்தில் சிக்கி பெண் பலி, விசாரிக்க முதல்வா் உத்தரவு

19th Oct 2022 02:05 AM

ADVERTISEMENT

பெங்களூரில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்பதால் விபத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறை அறிக்கை அளிக்க முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.

பெங்களூரில் அக். 17-ஆம் தேதி தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த உமாதேவி (50) என்ற பெண், சாலை குழிக்குள் விழாமல் தப்பிக்க முயன்றபோது பின்னால் வந்த பெங்களுரு மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து அவா் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த உமாதேவி பெங்களூரு, ராஜாஜி நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பெண் இறந்தது குறித்து முதல்வா் பசவராஜ் பொம்மை காவல் துறையிடம் விசாரணை அறிக்கையை அளிக்குமாறு உத்தரவிட்டாா்.

இதுகுறித்து முதல்வா் கூறியதாவது:

ADVERTISEMENT

பாதிக்கப்பட்டவா்களை மாநகராட்சி ஆணையா் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளாா். அந்தப் பெண் சென்ற சாலையில் பள்ளம் இருந்தது, அதை சரிசெய்யாமல் அதிகாரிகள் இருந்தது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். காவல் துறை அறிக்கை கிடைத்ததும், தவறு செய்தவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT