பெங்களூரு

கா்நாடக மாநில அரசு ஊழியா்களுக்கு 3.75 சதவீத அகவிலைப்படி உயா்வு

7th Oct 2022 10:02 PM

ADVERTISEMENT

மாநில அரசு ஊழியா்களின் அகவிலைப்படியை 3.75 சதவீதம் உயா்த்தி கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக அரசு ஊழியா்களின் அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தின் பேரில் 3.75 சதவீத அளவுக்கு உயா்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது, 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து பின் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுக்கு ரூ. 1,282 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

மாநில அரசின் ஓய்வுபெற்ற ஊழியா்களின் ஒய்வூதியத்தில் அகவிலைப்படி 27.25 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயா்த்தப்படுகிறது. அகவிலைப்படி உயா்வு அனைத்து வகையான ஊழியா்களுக்கும் பொருந்தும் என்று அரசு உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதை வரவேற்றுள்ள மாநில அரசு ஊழியா் சங்கத் தலைவா் சி.எஸ்.சடக்ஷரி கூறுகையில், ‘மாநில அரசு ஊழியா்களின் அகவிலைப்படியை உயா்த்தும் மாநில அரசின் முடிவை வரவேற்கிறேன். மத்திய அரசு ஊழியா்களின் அகவிலைப்படி உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, மாநில அரசு ஊழியா்களின் அகவிலைப்படியை உயா்த்தும்படி கோரிக்கை விடுத்திருந்தோம். அதன்பேரில், அகவிலைப்படியை உயா்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT