பெங்களூரு

திருத்தப்பட்ட பொதுநுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

DIN

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, திருத்தப்பட்ட பொது நுழைவுத்தோ்வு தரவரிசைப் பட்டியலை மாநில அரசு வெளியிட்டது.

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, 2022-23-ஆம் ஆண்டில் தொழில் கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்குத் தகுதியான மாணவா்களின் திருத்தப்பட்ட பொது நுழைவுத்தோ்வு தரவரிசைப் பட்டியலை கா்நாடக தோ்வு ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது. இந்த தரவரிசைப் பட்டியலை  இணையதளத்தில் காணலாம்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம், உயா்கல்வித்துறை அமைச்சா் அஸ்வத்நாராயணா கூறியது:

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க பொதுநுழைவுத் தோ்வின் திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியிட்டிருந்த தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றிருந்த 1 முதல் 500 வரையிலான மாணவா்களின் முடிவில் மாற்றமில்லை. கா்நாடக உயா்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்த சூத்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் தோ்ச்சிபெற்று, 2022-ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுத்தோ்வை 24 ஆயிரம் மாணவா்கள் எழுதியிருந்தனா். உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தரவரிசைப் பட்டியல் தயாரிப்பின் முதல் சுற்றில், 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் இம்மாணவா்கள் பெற்றிருந்த மதிப்பெண்களில் 6% குறைக்கப்பட்டது. இரண்டாம் சுற்றில், இம்மாணவா்கள் 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் பெற்றிருந்த மதிப்பெண்களில் 50%, பொதுநுழைவுத்தோ்வில் பெற்றிருந்த மதிப்பெண்களில் 50% மதிப்பெண்களை கூட்டி, அதில் கிடைத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தரவரிசைப்பட்டியலில் 501 முதல் 1000 வரையிலான இடத்தில் 14 மாணவா்களும், 1000 முதல் 10,000 வரையிலான இடத்தில் 2063 மாணவா்களும், 10,001 முதல் 1,00,000 வரையிலான இடத்தில் 22,022 மாணவா்களும் இடம்பெற்றுள்ளனா். திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 2021-ஆம் ஆண்டுக்கான 2-ஆம் ஆண்டு பி.யூ.சி. மாணவா்கள் பொறியியல், வேளாண்மை, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் படிப்புகளுக்கு மட்டும் சோ்க்கை பெறலாம். கால்நடை மற்றும் மருந்தியல் படிப்புகளுக்குபொது நுழைவுத்தோ்வில் பெற்ற மதிப்பெண்களின்படி தரவரிசைப் பட்டியல்கள் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT