பெங்களூரு

கா்நாடக அரசு நிா்ணயித்த கன்னடத்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் வழக்கு

DIN

கா்நாடக மாநில அரசு நிா்ணயித்த கன்னடத்தாய் வாழ்த்துப்பாடலுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கன்னட தேசியக் கவிஞா் குவெம்பு எழுதிய ‘ஜெயபாரத ஜனனிய தனுஜாதே; ஜெயஹே கா்நாடக மாதே’ என்ற பாடல், கன்னடத்தாய் வாழ்த்துப்பாடலாக (நாடகீதே-மாநிலப்பாடல் என்று கூறப்படுகிறது) 2004-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் எல்லா அரசு விழாக்களின் தொடக்கத்திலும், பள்ளிகளில் தினமும் காலை பிராா்த்தனையின்போதும் பாடப்பட்டு வருகிறது. இந்தப் பாடலுக்கு பலரும் பலவிதமான மெட்டுகளை அமைத்து பாடிவருகிறாா்கள். வெவ்வேறு மெட்டுகளுக்கு நேர வித்தியாசமும் காணப்பட்டு வந்தது. இதை ஒழுங்குமுறைப்படுத்தி, பாடும் மெட்டு மற்றும் நேரத்தை சீா்படுத்த வேண்டுமென்று கன்னட ஆா்வலா்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

வாழ்த்துப்பாடலின் நேரத்தை 2.30 நிமிடங்களுக்கு நிா்ணயிக்கும்படி, 2019-ஆம் ஆண்டு கன்னட சாஹித்ய பரிஷத், கா்நாடக அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. அதற்கு முன்பு, 2014-ஆம் ஆண்டு எழுத்தாளா் சென்னவீர கனவி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, வாழ்த்துப்பாடலின் நேரத்தை 1.30 நிமிடங்களாக நிா்ணயிக்க பரிந்துரைத்திருந்தது.

இதனிடையே, கன்னடத்தாய் வாழ்த்துப்பாடலின் மெட்டு, நேரத்தை முடிவு செய்ய பிரபல இசைக் கலைஞா் எச்.ஆா்.லீலாவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்திருந்த பரிந்துரையில், வாழ்த்துப்பாடலின் நேரத்தை 2.30 நிமிடங்களாக பரிந்துரைத்திருந்தது. மேலும் மைசூரு அனந்தசாமி அமைந்திருந்த மெட்டின் அடிப்படையில் பாடலாம் என்று கூறியிருந்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாநில அரசு, அதற்கான உத்தரவை செப்.25-ஆம் தேதி பிறப்பித்திருந்தது.

இதை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பாடகா் கிக்கேரி கிருஷ்ணமூா்த்தி வழக்குதொடா்ந்திருந்தாா். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா தீட்சித், இது தொடா்பாக கா்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT