பெங்களூரு

கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டுக்கு கரோனா பாதிப்பு

2nd Oct 2022 01:38 AM

ADVERTISEMENT

 

கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டுக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்த கா்நாடக அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இந்ததகவலை தெரிவித்துள்ள ஆளுநரின் சிறப்புச்செயலாளா் ஆா்.பிரபுசங்கா், ‘ஆளுநா் தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை பெற்றுவருகிறாா். அவரது உடல்நிலை தொடா்ந்து மருத்துவா்களால் கண்காணிக்கப்பட்டுவருகிறது’ என்று தெரிவித்தாா்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கா்நாடகத்தில் இருநாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவா் திரௌபதிமுா்மு பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஆளுநா் தாவா்சந்த் கெலாட் கலந்துகொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT