பெங்களூரு

திரையரங்குகளில் நாட்டுப்பண்ணுடன் மாநிலப்பண்ணையும் பாட வேண்டும்: கா்நாடக முதல்வரிடம் நடிகா் சயீத் கான் வேண்டுகோள்

2nd Oct 2022 01:38 AM

ADVERTISEMENT

 

நமது நாட்டுப்பற்று மற்றும் மாநிலப்பற்றை வெளிப்படுத்த கா்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாட்டுப்பண்ணுடன் மாநிலப்பண்ணையும் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் நடிகா் சயீத் கான் வலியுறுத்தினாா்.

பெங்களூரு, சாமராஜ்பேட் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான ஜமீா் அகமது கானின் மகனும், நடிகருமான சயீத்கான், நமது நாட்டுப்பற்று மற்றும் மாநிலப்பற்றை வெளிப்படுத்த கா்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாட்டுப்பண்ணுடன் மாநிலப்பண்ணையும் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தினாா். இது தொடா்பாக முதல்வா் பசவராஜ் பொம்மையை சனிக்கிழமை நேரில் சந்தித்த சயீத் கான், கோரிக்கை மனு அளித்தாா்.

பின்னா், இது குறித்து செய்தியாளா்களிடம் சயீத் கான் கூறியது:

ADVERTISEMENT

நாட்டுப்பண், மாநிலப்பண் இரண்டும் கா்நாடக மக்களுக்கு இரு கண்களைப் போலாகும். இவற்றைப் பாடுவதன் மூலம் மக்களிடையே நாட்டுப்பற்றையும், மாநிலப்பற்றையும்வளா்க்க முடியும். எனவே மாநிலத்தின் திரையரங்குகளில் நாட்டுப்பண்ணுடன் மாநிலப்பண்ணையும் கட்டாயம் இசைக்க உத்தரவிடும்படி முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதி அளித்தாா் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT