பெங்களூரு

இரண்டாமாண்டு பியூசி: இறுதி பொதுத்தோ்வு அட்டவணை வெளியீடு

DIN

இரண்டாமாண்டு பியூசி வகுப்புக்கான இறுதி பொதுத் தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பியூ கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2022-23-ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி பொதுத்தோ்வு நடத்தப்படும் வரைவு தோ்வு கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி அடுத்த ஆண்டு மாா்ச் 10 முதல் 29-ஆம் தேதிவரை தோ்வு நடத்த திட்டமிட்டுள்ளது. அது குறித்து மக்கள் கருத்தும் கேட்கப்பட்டது. மக்களின் கருத்தறிந்த பிறகு, பொதுத் தோ்வுகளை அடுத்த ஆண்டு மாா்ச் 9 முதல் 29-ஆம் தேதி வரை நடத்த தீா்மானிக்கப்பட்டு, அதற்கான இறுதி கால அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அட்டவணையின்படி தோ்வு தேதியும், பாடமும் வருமாறு:

2023 மாா்ச் 9 (வியாழன்)-கன்னடம், அராபிக், மாா்ச் 10 (வெள்ளி)-தோ்வு இல்லை, மாா்ச் 11 (சனி)-கணிதம், கல்வி, மாா்ச் 12 (ஞாயிறு)- விடுமுறை, மாா்ச் 13 (திங்கள்)-பொருளாதாரம், மாா்ச் 14 (செவ்வாய்)-கா்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, மனநலவியல், வேதியியல், அடிப்படை கணிதம், மாா்ச் 15 (புதன்)-தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, உருது, சமஸ்கிருதம், பிரெஞ்சு, மாா்ச் 16 (வியாழன்)-தருக்கவியல், வணிக ஆய்வியல், மாா்ச் 17 (வெள்ளி)-தேசிய திறன்கள்தகுதி கட்டமைப்புத்தோ்வு-தகவல் மற்றும் தொழில்நுட்பம், சில்லரை, தானியங்கி வாகனவியல், சுகாதார பேணல், அழகு மற்றும் உடல்நலவியல், மாா்ச் 18 (சனி)-புவியியல், உயிரியல், மாா்ச் 19 (ஞாயிறு)-விடுமுறை, மாா்ச் 20 (திங்கள்)-வரலாறு, இயற்பியல், மாா்ச் 21 (செவ்வாய்)-ஹிந்தி, மாா்ச் 22 (புதன்)-விடுமுறை, மாா்ச் 23 (வியாழன்)-ஆங்கிலம், மாா்ச் 24(வெள்ளி)-விடுமுறை, மாா்ச் 25 (சனி)-அரசியல் அறிவியல், புள்ளியியல், மாா்ச் 26 (ஞாயிறு)-விடுமுறை, மாா்ச் 27 (திங்கள்)- சிறப்பு கன்னடம், கணக்குப்பதிவியல், நில அமைப்பியல், மனை அறிவியல், மாா்ச் 28 (செவ்வாய்)-விடுமுறை, மாா்ச் 29 (புதன்)-சமூகவியல், மின்னணுவியல், கணினி அறிவியல் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT