பெங்களூரு

ஜன.20இல் பெங்களூரில் பன்னாட்டு சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி

30th Nov 2022 02:21 AM

ADVERTISEMENT

பெங்களூரில் 2023ஆம் ஆண்டு ஜன. 20ஆம் தேதி பன்னாட்டு இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி நடக்கவிருக்கிறது.

கா்நாடக அரசு சாா்பில் பெங்களூரில் 2023ஆம் ஆண்டு ஜன.20 முதல் 22-ஆம் தேதிவரையில் பன்னாட்டு இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடக்கவுள்ளது. இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்களை தேசிய அளவில் மட்டுமல்லாது பன்னாட்டு அளவிலும் கொண்டுசெல்லும் முயற்சியில் கா்நாடகம் வலுவான அடித்தளம் அமைத்துள்ளது. இதை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியாகவே இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் வணிகக் கண்காட்சி நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பெங்களூரில் ஜன.20-ஆம் தேதி முதல் நடக்கவிருக்கும் கண்காட்சியை முதல்வா் பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறாா். கண்காட்சியில் பங்கேற்க அமெரிக்கா, ஐரோப்பா, துபை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இயற்கை வேளாண்மையின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளா்கள், வாடிக்கையாளா்கள், விவசாயிகள், தொழில்முனைவோா் வருகை தரவிருக்கிறாா்கள்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT