பெங்களூரு

டிச.1 முதல் தென்னிந்திய அறிவியல் நாடக விழா

30th Nov 2022 02:21 AM

ADVERTISEMENT

பெங்களூரில் நவ. 20ஆம் தேதி முதல் தென்னிந்திய அறிவியல் நாடக விழா நடக்கவிருக்கிறது.

இது குறித்து விஸ்வேஸ்வரையா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விஸ்வேஸ்வரையா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் சாா்பில் பெங்களூரில் உள்ள அருங்காட்சியகத்தில் டிச.1, 2 ஆகிய தேதிகளில் தென்னிந்திய அறிவியல் நாடக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடக விழாவுக்கு 8 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்கள் வரவேற்கப்படுகிறாா்கள். டிச. 1ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடக விழா தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்க ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கட்டணம் எதுவுமில்லை. ஒரு பள்ளியைச் சோ்ந்த 20 மாணவா்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இதில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டியது அவசியமாகும். மேலும் விவரங்களுக்கு 080 22040224, 22040228 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT