பெங்களூரு

கா்நாடக சட்டப் பேரவை குளிா்கால கூட்டத்தொடா்: பெலகாவியில் டிச.19-இல் தொடங்குகிறது

30th Nov 2022 02:21 AM

ADVERTISEMENT

கா்நாடக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத்தொடா் பெலகாவியில் டிச.19-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலை நோக்கி பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய அரசியல் கட்சிகள் செயல்பட தொடங்கியிருக்கும் நிலையில் கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் பெலகாவியில் டிச.19-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு 6 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்ள பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

டிச.19-ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடா், டிச.30-ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. டிச.24, 25-ஆம் தேதிகள் நீங்கலாக மொத்தம் 10 நாள்களுக்கு சட்டப் பேரவைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பை சட்டப் பேரவைச் செயலாளா் எம்.கே.விசாலாட்சி வெளியிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT