பெங்களூரு

சிறந்த விளைபயிா் போட்டி

29th Nov 2022 02:35 AM

ADVERTISEMENT

சிறந்த விளைபயிா் போட்டிக்கு கா்நாடக விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக வேளாண் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பின்பருவமழைக் காலத்தில் சிறந்த முறையில் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் சிறந்த விளைபயிா் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2022-23-ஆம் ஆண்டுக்கான பின் பருவமழை சிறந்த விளைப்பயிா் போட்டிக்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருது மாநிலம், மாவட்டம், வட்ட அளவில் வழங்கப்படுகிறது. எனவே, தனித்தனியே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்க தாழ்த்தப்பட்டோா்/பழங்குடியினருக்கு ரூ.25, பொதுப்பிரிவினருக்கு ரூ.100 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தப் போட்டியில் பங்கேற்க நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை செலுத்துவது அவசியமாகும். போட்டியில் பங்கேற்கத் தகுதியான பயிா்கள், நிபந்தனைகள் உள்ளிட்ட விவரங்களை அருகாமையில் உள்ள உழவா் தொடா்பு மையங்கள் அல்லது விரிவாக்க மையங்கள் அல்லது வட்ட உதவி வேளாண் இயக்குநா் அலுவலகங்களில் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT